ஒரு நேதாஜி எத்தனை தடவை சாவார்?

August 12, 2006

நேதாஜியின் மர்ம மறைவைப் பற்றி விசாரித்தறிவதற்காக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டடுள்ள விசாரணைக் கமிட்டியால் அழைக்கபட்டவன் என்ற முறையில் நான் ஏப்ரல் 1-ம் தேதி இங்கு (டில்லி) வந்து விட்டேன்.

நான் டில்லிக்கு வரவேண்டுமென்று வேண்டி திரு. ஷாநவாஸ் கான் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார் - அதே வேண்டுகோள் கடிதம் மேலும் சிலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கெழுதிய கடித்திற்கும் . பிறருக்கு எழுதிய கடிதத்திற்கும் கருத்து வேறுபட்டிருக்கிறது.

அதாவது: எனக்கெழுதிய கடித்தில்,”நோதாஜி எப்படி மறைந்தார்? (டிஸ் அப்பீரன்ஸ்) என்பதைப் பற்றி விளக்க.” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், என்மாதிரி விளக்கமளிக்க அழைக்கப்பட்ட பிறருக்கு எழுதிய கடிதத்தில் ” நேதாஜி எப்படிச் செத்தார் - செத்ததற்கான காரணங்கள் ( சர்க்கம் ஸ்டென்சஸ் ஆப் நேதாஜீஸ் டெத்) எவை என்பதை விளக்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணைக் கமிட்டியின் ஆரம்பப் போக்கே கூறுபிரிந்து காண்கிறது. இதன்மூலம் அரசாங்கம் ஏற்கனவே நேதாஜி பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவும் தோன்றுகிறது. அதேசமயம் நேதாஜி பற்றிய விஷயத்தைத் தவறான முறையில் பிரச்சாரிப்பதாகவும் கருதத் தோன்றுகிறது. இது என்ன – ஏன்? என்பது சரிவரப் புரியவில்லை.

நான் ஏப்ரல் 1-ம் தேதி காலை 9 மணி சுமாருக்கு டில்லி வந்து சேர்ந்தவுடன், ஷாநவாஸ் கான் என்னை டெலிபோனில் அழைத்தார் - பேசினேன். அன்று மாலையே சந்திக்க வேண்டுமென்று கோரினார் - சரி என்றேன். அதன்படி மாலை 6 மணிக்கு அவரைச் சந்தித்தேன்.

விசாரணக் கமிட்டியைச் சேரந்த மூவரில் ஒருவரான. அந்தமான் தீவுகளின் நிர்வாகி திரு. மொய்த்ரா இதுவரை டில்லி வந்து சேரவில்லை - அவர் எந்தச் சமயத்திலும் விசாரணைக் கமிட்டியோடு வந்து சேர்ந்து கொள்ளலாமென எதிர்பார்க்கிறோம் - என்று அவர் எனக்கு அறிவித்தார். இன்று தேதி ஏப்ரல் 3- அதுவரை அந்தத் திரு. மொய்த்ரா வரவில்லை - எப்பொழுது வருவார் என்பததற்கான அறிகுறியும் தெரியவில்லை. சாட்சியமளிக்க வந்த வேறு சிலரும் கடந்த மூன்று நாட்களாகக் காத்திருக்கின்றனர்.
விசாரணைக் கமிட்டிக்குள்ள பொறுப்பின் கனத்துக்கு இது ஒரு உதாரணம்.

விசாரணைக் கமிட்டி ஜப்பானுக்குத்தான் செல்லுமென்று சொல்லப்படுகிறது. கமிட்டி தன் நோக்கம் போல் எந்த நாட்டிற்கும் செல்ல உரிமை பெற்றிருக்கிறதா? என்பதும் தெரியவில்லை.

நேதாஜி சீனாவில் இருப்பதாகத் தெரிகிறது. பீகிங்கில் 1952ல் நடந்த ஒரு மாநாட்டில் மங்கோலியப் பிரதிநிதிகளில் ஒருவராக நேதாஜி சென்றிருந்ததாகவும் அறிகிறோம். ” அந்த மங்கோலியப் பிரதிநிதிகளுடன் எடுக்கப்பட்ட புகைப் படத்தில் தெரியும் ஒருவர் நேதாஜி மாதிரியே இருக்ககிறார்” என்று கனம் நேரு அவர்களே கூறியுள்ளார்கள். எனவே விசாரணைக் கமிட்டி தன் நோக்கம் போல் எந்த நாட்டிற்கும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டியது அதி அவசியம்! பிறரின் கட்டுப்பாட்டிற்கோ, தனிப்பட்டோரின் நோக்கத்திற்கோ மடங்கி, கமிட்டி வேலை செய்யலாகாது.

திரு. ஷாநவாஜ்கான், கமிட்டித் தலைவராக இருக்கிறார். இதற்கு இவருடைய தகுதியைப் பற்றிநான் எதையும் கூறவில்லை. ஆனால் அவர் ஒரு ராணுவத் தளபதி, ராணுவரீதியில் அவரது தலைமையில் பல சிறந்த வெற்றிகளை எதிர்பார்க்கலாம்..

ஆனால் நேதாஜியின் மர்ம மறைவுப் பிரச்சனை ராணுவ விவகாரமல்ல – நீதி சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே கமிட்டித் தலைவராக ஒரு சிறந்த ராணுவ நிபுணர் இயங்குவதைவிட, நீதி நிர்வாகத்தில் தேர்ந்த ஒரு நீதிபதி இயங்குவதில் அதிக பலனை எதிர்பார்க்கலாம். அது தான் நெறி! கமிட்டித் தலைமைக்குப் பொருத்தமானவர் அகில உலகப் புகழ்பெற்ற நீதிபதி பால் அவர்கள்தான் என்பது எனது கருத்து - முடிவு. இதில் நியாயபாவமுள்ள எவரும் மாறுபடமாட்டார்கள் என்றே கருதுகிறேன். விசாரணைக் கமிட்டித் தலைமையை ஏற்க நீதிபதி பால் அவர்களை அழைக்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க, யுத்தக் குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜியின் பெயர் இன்னும் இருக்கிறதா - இல்லையா? இல்லாது போனால்எப்பொழுது - எப்படி நீக்கப்பட்டது? என்பதை அரசாங்கம் இந்தக் கட்டத்தில் அதிகார பூர்வமாய் மக்கள் சன்னதியில் வெளியிட்டுவிட வேண்டு மென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

1941 ஜனவரி 10ல் நேதாஜி இந்தியாவை விட்டு வெளியேறினார் - ஆனால் இது ஜனவரி 16ல் தான் அரசாங்கத்திற்குத் தெரியும் . அந்தத் தேதிக்குப் பிறகுதான் அரசாங்கம் தேடத் தொடங்கிற்று.

நேதாஜி செத்துவிட்டதாகச் சொல்லப்படுவது இப்பொழுது மட்டுமல்ல – ஏற்கனவே நடந்திருக்கிறது.

1942 மார்ச்சில் சர்.ஸ்டாப் போர்ட்டு கிரிப்ஸ் தனது திட்டத்தோடு இந்தியாவுக்கு வந்திருந்தபோது. 1941 ஜனவரி 10ல் நாடு கடந்த நேதாஜி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.

இச்செய்தியை முதன்முதலில் கொடுத்தது லண்டன் ராய்ட்டர் செய்தி நிலையம்.

டோக்கியோவில் நடைபெறும் சுதந்திர இந்தியக் காங்கிரசுக்கு விமானத்தில் செல்லும் வழியல் ஜப்பானிய கடற்கரைக்கு அப்பால், விமானம் விபத்தாகி சுபாஷ்போஸ் உயிரிழந்தார் என்பது ராய்ட்டர் செய்தி.

இச்செய்தி பிரான்சிலிருந்து லண்டனுக்குக் கிடைத்தது. பிரான்ஸ் அச்செய்தியை ரோமாபுரியிலிருந்து பெற்றதாம். ரோமபுரிக்கு அச்செய்தி டோக்கியோவிலிருந்து, பெர்லின் வழியாக வந்ததாம்! எனினும் அச்செய்தி நிரூபிக்கபட்டவில்லை . இந்திய சமுதாயத்தின் பாக்கியவசத்தால் , 1942 மார்ச்சில் ராய்ட்டர் செய்தியின் மூலம் செத்த சுபாஷ்பாபு பிறகு உயிரோடு தோன்றிவிட்டார்.

இரண்டாவது தடவையாக நேதாஜி செத்துவிட்டார் என்றால் செய்தி 1945 ஆகஸ்ட் 24ல் இந்தியப் பத்திரிகைளில் வெளியாயிற்று. அச்செய்தி ஆகஸ்ட் 23 ல் லண்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொடுக்கபட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யும் விமான விபத்து நடந்தது 1945 ஆகஸ்ட் 18ல்.

உலக முக்யத்துவம் வாய்ந்த இச்செய்தி ஐந்து நாட்கள் தாமதித்து பத்திரிகைகளுக்கு வந்தது. பத்திரிகையுலகிலேயே இது வரை நடந்திராத புதுமையாகும்.

“ஜப்பான் சர்க்காரோடு பேசுவதற்காக ஆசாத் ஹிந்த் அரசாங்கத் தலைவர் நேதாஜி போஸ், 1945 ஆகேஸ்ட் 16ல் சிங்கப்பூரை விட்டு டோக்கியோவுக்குச் செல்லும் வழியில் அவர் பிரயாணித்த விமானம் டைஹோக்கு விமான நிலையத்தில் 1945 ஆகஸ்ட் 18 பிற்பகல் 2 மணிக்கு விபத்திற்கிலக்காகியதால் நேதாஜி போஸ் ஆபத்தான காயங்களுடன் ஜப்பானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளித்தோம் - குணமாகவில்லை - அன்று நள்ளிரவில் காலமாகிவிட்டார்” என்பது ஜப்பான் அரசாங்கம் கொடுத்த செய்தி.

அவருடன் அதே விமானத்தில் சென்ற கர்னல் ஹபிபுர் ரஹ்மானும், இதர ஐந்து ஜப்பானியத் தளபதிகளும் காயம் பட்டுப் பிறகு பிழைத்துக்க விட்டதாகச் செய்தி! ஆயினும், எல்லோருமே செத்துவிட்டதாகப் பிறகு ஜப்பான்ட தரப்பில் கூறப்படுகிறது.

நேதாஜி இறந்துவிட்டதாக வெளியான செய்திகளில் இது இரண்டாவதாகும்.

ஆனால், இரண்டாவது தடவையும் உயிரோடு மிஞ்சிவிட்டார் - செய்திகளையெல்லாம் கடந்து!

நேதாஜியுடன் சென்று விமான விபத்தில் காயம் பட்ட ஜப்பானியத் தளபதிதான் பின்னர் பார்மோசாவில் அமெரிக்கரிடம் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தக் கட்டம் தான் நேச தேசத்தினருக்குச் சந்தேகத்தை எழுப்பிவிட்டது.

விமான விபத்து என்று ஒன்று உண்மையிலேயே நடந்திருந்தால், இந்த ஜப்பானிய தளபதியுமல்லவா செத்திருக்க வேண்டும்? என்ற சந்தேகக் கேள்வி நேச தேசத் தளபதிகளிடம் எழுந்தது.

நேதாஜி இறந்துவிட்டதாக அறிவிக்கபட்டு ஒரு மாதம் சென்றபின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது. கூட்ட ஆரம்பத்தில், 1942 ஆகஸ்ட் 8 க்குப் பிறகு இறந்துபோன முக்கியத் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கான இறந்தவர்களின் பெயர் பட்டியலை கிருபளானி படித்தார்.

அதில் சுபாஷ்பாபுவின் பெயர் படிக்கபட்படவில்லை.” இது ஏன்?” என்று ஒரு உறுப்பினர் கேட்டார். அதற்கு அன்றையக் காங்கிரஸ் ராஷ்டிரபதியாக இருந்த மெளலானா அபுல்கலாம் ஆசாத்.”நேதாஜி சுபாஷ் இறந்துவிட்டதாகக் கிடைத்த செய்திகளைத் திட்டவட்டமாக நம்புவதற்கில்லை - அச்செய்தியைக் கொடுத்த வட்டாரமே அதை உறுதிப்படுத்தும் வகையில் எதையும் வெளியிடவுமில்லை - எனவே அவர் பெயரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கவில்லை” என்று பதில் கொடுத்தார்! இந்தப் பதிலுக்குக் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதுதவிர 1945 செப்டம்பர் 2ல் சுபாஷ் பாபுவின் தொடர்பு, காந்தியடிகளுடன் இருக்கிறது என்ற ஐயப்பாட்டின் மீது, அன்று மகாத்மா புனாவில் தங்கியிருந்த இயற்கை வைத்திய மாளிகையை 24 சி.ஐ.டி.கள் சுற்றி வளைத்து நின்றார்கள் - நேதாஜியைக் கைது செய்ய! ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர்கள் ஏமார்ந்து விட்டனர். ஏனெனில் சுபாஷ் போஸ் என்று நினைத்துக் கைது செய்ய மகாத்மாவின் ஜாகைக்கு வந்த சி.ஐ.டி.கள் அங்கிருந்த நேதாஜியின் தம்பியான சலீல் போஸ் எனத் தெரிந்து கொண்டதால் தொங்கிய முகத்துடன் திரும்பிவிட்டனர்.

அதிலிருந்து நேதாஜியின் மரணத்தை நம்பாத பிரிட்டானியர் இன்றுவரை அவரைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர்

பின்னர் பத்து நாள் கழித்து மற்றோரு செய்தி வந்தது ராய்ட்டர் மூலம்.

“நேதாஜி இறந்து போனார் என்று ஜப்பான் வெளியிட்ட கொஞ் நாட்களுக்குப்பிறகு. செய்கோனில் அவர் இருந்ததாக நிச்சயமாகத் தெரிகிறது” என்று அமெரிக்க நிருபர் அறிவித்தார். அதை ஆங்கிலோ - அமெரிக்க வட்டாரம் அலட்சியப்படுத்தவில்லை - நம்பிற்று.

இதையடுத்து மற்றொரு செய்தி இந்திய அசோசியேட்டட் பிரஸ் மூலம் வெளியாயிற்று.

சயாம் ராணுவ உதவித் தலைமைத் தளபதி லெ. ஜெனரத் அக்டி சேனாநரொங் என்பவர்,” ஜப்பானியரின் செய்தியை வைத்து நேதாஜி இறந்துவிட்டதாக என்னால் நம்ப முடியாது இதற்கு முன் இதே மாதிரி பல செய்திகள் நேதாஜி மரணம் பற்றி வெளியாகி விட்டன. ஆனால் ஒரு செய்தியாவது அவரை இது வரை நிஜமாகக் கொல்லவில்லை” என்று நிருபர்கள் கூட்டத்தில் கூறுகையில் குறிப்பிட்டதுதான் அச்செய்தி.

1945 செப்டம்பர் 18-ல் மற்றொருசெய்தியை இலங்கையிலிருந்து யுனைடெட் பிரஸ் வெளியிட்டது.

அதாவது: “சிங்கப்பூரில் பிரபல வழக்கறிஞராகவும் ஜப்பானிய ஆட்சியின் போது நீதித்துறையை நிர்மாணித்து உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த திரு. எம்.வி. பிள்ளை,நேதாஜி இறந்ததை எதிர்க்கிறார். “ஏனெனில் அவருடன் அதே விமானத்தில் பிரயாணம் செய்து விபத்தில் சிக்கி. மடிந்து விட்டதாச் செய்தி கொடுக்கப்பட்ட ஜப்பான் தளபதிகளில் ஒருவரான கிமுரா என்பவர்தான் பிறகு சிங்கப்பூரில் நேச தேசப்படையினரிடம் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுதிட்டவர். இவர் ஒருமாத்திற்குள் செத்து எப்படிப் பிழைத்து வந்தாரோ அதேமாதிரிதான் நேதாஜியின் மரணச் செய்தியுமிருக்கும்” என்று அவர் கூறினார்.

பின்னர்1946 மார்ச்சு 24ம் தேதியிட்டு ஏ.பி.ஐ. செய்தி நிலையம் சென்னையிலிருந்த வெளியிடப்பட்ட ஒரு செய்தியை லாகூரில்உள்ள ‘ட்ரிபியூன்’ பத்திரிகை மார்ச 26ல் பிரசுரித்திருந்தது.

அதாவது:”சிங்கப்பூர் வீழ்ச்சியின்போதுநகரசபை இஞ்ஜினியாராக இருந்த திரு. நாயர்என்பவர், நேதாஜியின் மரணச்செய்தியில் ஒரு எழுத்தைக்கூட ஏற்கவில்லை. ஏனெனில், டைஹோக்குவில் விபத்தாகி நொறுங்கிவிட்டதாகச் செய்தி கொடுக்கப்பட்ட நேதாஜி சென்ற விமானம். மறுநாள் ஹாங்காங்கில் காணப்பட்டது. அதில் எவ்விதச் சேதமோ பழுதோ கிடையாது என்று நாயர் கூறுகிறார்.”

1946மார்ச் 12ல் ஐ.என்.ஏ. வீரர்களான ஷாநவாஸ் கானும், சைகாலும் காந்தியடிகளோடு பேசிக் கொண்டிருக்கையில், “நீங்கள் எதிரெதிரான எத்தகைய செய்திகளைக் கொடுத்தாலும் நேதாஜி போஸ் சாகவே இல்லை என்பதுதான் எனது தீர்மானம்” என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் சிலருக்குத் தெரிந்திருக்கலாம் - பலருக்கு தெரியாதிருக்கலாம் . ஆனால், சுபாஷ் பாபு இறந்து விட்டதாக முளைத்த செய்தி அதன் தொடுவாயிலே எவரின் நம்பிக்கையையும் பெறவில்லை என்றாலும், அச்செய்தி பல கிளைகளாக வளர்ந்து எப்படியெல்லாம் ஆகிவிட்டிருக்கிறது என்பதைச் சரியான கட்டத்தில் நினைவுறுத்த வேண்டுமென்பதற்காகவே தலைநகரில் அவைகளை விவரிக்கிறேன. இவை நிற்கட்டும். இன்றைய நடப்புக்கு வருவோம்.

நேதாஜியை ஜப்பானியர்கள் தான் மஞ்சூரியாவுக்கு அழைத்துச் சென்றனர்.

ஏனெனில், ஜப்பான் அச்சு நாடுகளின் கூட்டில் பிணைந்திருந்தாலும் (அச்சு நாடுகளின் தலைமையான ஜெர்மனிக்கு எதிரி நாடான), ரஷ்யாவோடு நடுநிலைமை ஒப்பந்தம் செய்த கொண்டிருந்தது (இதற்கு ஏற்பாடு செய்தவர் நேதாஜிதான்). மேலும் காலந்தாழ்த்தினால் ஆங்கிலோ - அமெரிக்கப் படைகள் மஞ்சூரியாவுக்குள் புகுந்துவிடும். அதைத் தடுத்துவிட வேண்டு மென்பதற்காக ஜப்பானும், ரஷ்யாவும் இரகசியமாகப் பேசிக் கொண்டு, தக்க முன்னேற்பாட்டுடன் சரணடைவதற்கு ஒரு வாரம் முன், ரஷ்யா, ஐப்பான் மீது போர்ப் பிரகடனம் விடுத்தது. இதற்கு முன்பே ஜப்பானின் தலைசிறந்த ராணுவ நிபுணர்களும், தளபதிகளும், கடற்படை - விமானப்படைகளில் மிக முக்கிய நிபுணர்களும், மஞ்சூரியாவுக்கு மாற்றப் பட்டு விட்டனர். ஆகவேதான் நேதாஜி மஞ்சூரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு 1945 செப்டம்பரில் யுத்தம் முடிந்தது.

இரண்டாவது உலகப்போர், திட்டமிட்டவாறு கிழக்காசியாவில் முடிந்த பிறகு. ஆசிய விடுதலைக்கென்று ஜப்பான் - சீன வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை மோசிடாங் தலைமையில் நேதாஜி நிர்மாணித்தார். அதில் பர்மா, இந்தோ - சீனா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன், தாய்லந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்தார்கள். அந்த ராணுவத்திற்கு ரஷிய அரசாங்கம் உதவி.

ஆசிய விடுதலை ராணுவம், 1946 ஜனவரியில் - சீனாவில் போரை ஆரம்பித்தது. அந்தப் போருக்கு ‘கம்யூனிஸ்டுகள் புரட்சி’ என்று நேசதேசத்தினர் பெயர் கொடுத்தனர், ஆனால் அவர்கள் அலட்சியமாகக் கருதிய கம்யூனிஸ்டுகள் புரட்சிதான் சியாங்கே ஷேக்கை சீனாவை விட்டே வெளியேற்றிற்று, சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள், இன்னும் தென் கிழக்காசிய நாட்டினர் அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப் பதைத் தெரிந்த, சியாங்கே ஷேக்கின் ராணுவத்தினர், தமது தலைவர் சியாங் அமெரிக்காவின் விளையாட்டுப் பிள்ளை என்பதையும் நன்கு புரிந்து கொண்டனர். உடனே ஆயிரக் கணக்கில், எல்லா நாடுகளும் சேர்ந்த ஆசிய விடுதலை ராணுவத்திடம் சரணடைந்தனர்.

இந்தக் கட்டம் அதோடு ஓய்ந்து விடவில்லை. தாம் இனி சீனாவில் கால் கொண்டிருக்க இயலாது என்ற ஒரு பீதியை அமெரிக்க வட்டாரத்தில் 47ஜுன், ஜுலை வாக்கில் எழுப்பிவிட்டது.

இந்தச் சந்தியில்தான் மெளன்ட்பாட்டனின் ராஜதந்திரத் திட்டம் இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவதென்ற அபிமானமாக உருவாயிற்று!

சீனாவில் ஏற்பட்ட சுதந்திர வேட்கை வெற்றியாகக் கனிந்து. ஆதன் மூலம் ஆசியா வெங்கும் வீசிய ஆவேச அனலை ஆற வைக்க வந்த திட்டம்தான் மெளன்ட்பேட்டன் சுதந்திரமேயன்றி உண்மையில் இந்தியாவைச் சுதந்திரமாக்கும் நன்னோக்கமல்ல.

எப்படியோ இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற ஒன்று அன்று ஏற்பாடாகி இராவிட்டால், சீனர்கள் எல்லை கடந்து இந்தியப் பிவேசம் செய்து, வேற்றாட்சியை வெளியேற்றியே இருப்பார்கள் - அதற்கு நேதாஜியும் திட்டமிட்டிருந்தார்.

மெளன்ட்பாட்டனின் தன்னக்கட்டு சுதந்திரம், அந்தச் சமயம் வாய்த்துவிட்டால், ஆசிய விடுதலை ராணுவம் காலத்தின் தேவைக்காக, நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

மூன்றாவது உலக யுத்தம் தவிர்க்க முடியாதது என்ற நிலை அன்றே ஏற்பட்டு விட்டதால், ஆங்கிலோ - அமெரிக்கருக்கு இந்தியாவில் தளம் தேவைப்பட்டு விட்டது. இதற்காகத்தான் முன்னேற்பாடாக இந்தியாவை உடைத்து. பாகிஸ்தான் என்று ஒரு நாட்டையும் உண்டாக்கினார்கள்.

எஞ்சிய இந்தியாவை நடத்துவதற்கிடையில் எதிர்ப்படும் சங்கடங்களைச் சமாளிக்க காந்தீயர்கள். காமன்வெல்த் உறவு என்பதன் பெயரால் பிரிட்டனோடு பிணைந்தார்கள்.

இப்பிணைப்பின் பலன் சீட்டோபாக்தாத் ஒப்பந்தங்களின் மூலம் நன்கு வெளிப்பட்டு விட்டது. இந்தியாவுக்கு வேண்டாத அந்த ஒப்பந்தங்களில், இந்தியாவுக்கு வேண்டியபிரிடன்அங்கம் பெற்றிருக்கிறது.

சீட்டோ, பாக்தாத் ஒப்பந்தங்களைக் கண்டிக்கிற இந்தியா, அவ்வொப்பந்தங்களுக்கு உடையவர்களான, ஈரான் மன்னர், அமெரிக்கா, பிரிட்டன் வெளிநாட்டு மந்திரிகளுக்கு மனக்கனிவோடு வரவேற்பளித்தது.

அறைச் சங்கதிகளெல்லாம் அம்பலத்துக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், நமது நேரு அவர்கள் ராணுவ சாதனங்களை பிரிட்டனிடமிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வாங்க ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார்.

இதன் மூலம் இந்தியா எந்த முகாமில் சேரப்போகிறது என்பது தெளிவாகிறது.

இந்த நடப்போட்டங்கள் எவ்வாறிருந்தாலும், சர்வதேச ரீதியான நடவடிக்கைகளுக்குரியவாறு, தனது ஜனநாயகத்திட்டத்தை நிறைவேற்ற கண்ணிமைக்காமல் காத்திருக்கிறது ஆசிய சுதந்திரச் சேனை என்பதை நான் இந்த இடத்தில் சொல்லாமற் தீரவில்லை!.

நேதாஜி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள நமது பிரதமர் நேருவுக்கு நிஜமாகவே அக்கறையும், அபிமாமமும் இருக்குமானால், நான் அவரை நேரில் சந்தித்து வேண்டிய விவரங்களைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்.

சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டேன்

இரங்கூன் ‘ரசிகரஞ்சனி’ ஆசிரியர் திருச்சியில் ஓய்விலிருக்கிற பசும்பொன் தேவரவர்களை நவ. 27ல் பேட்டி கண்டு கேட்ட கேள்விகளுக்கு தேவரவர்கள் அளித்த பதில்கள் இவை:-
கனம், தேவரவர்கள் திருச்சி நகரைச் சேர்ந்த உறையூர் என்னும் வட்டாரத்தில், மேற்கு வண்டிக்காரத் தெருவிலுள்ள தியாகராஜத் தேவர் இல்லத்தில் , உடல் நிலை காரணமாக தற்கால்க ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கு சென்ற என்னை அவர் அன்புடன் வரவேற்று, அமரச் செய்து, என்னுடைய சுற்றுப்பிரயாணம் பற்றியும், பர்மாவில் வசிப்பவர்கள் பற்றியும் ஆவலோடு விசாரித்தார்.

கே. ஜீவபாரதி தொகுத்த
பசும்பொன் தேவரின் கட்டுரைகள்
என்ற புத்தகத்திலிருந்து

கி.பி. 1757 முதல் 1857 வரை இந்தியரின் நிலைமை

August 7, 2006

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக விளங்கியது. பிரிட்டிஷ்–பிரெஞ்சூ–டச்சூ-போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் சந்தைக் கடையாகப் பாரத நாட்டைப் பயன்படுத்தின. வாணிகத்தில் ஏற்பட்ட போட்டி–பொறாமை காரணமாக, அந்த நாடோடிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதோடு., உள்ள நாட்டு மன்னர்களிடையேயும் சண்டை மூட்டி விட்டுப் பாரதம் முழுவதையும் ‘குருஷேத்திரம்’ ஆக்கினர்.

அரசுரிமை ‘ஏலம் ‘

1757ல் வடக்கே வங்கத்தில் நடந்த ‘பிளாசிப் போர்’ தொடங்கி, 1857ல் வடபாரதம் முழுவதிலும் நடை பெற்ற’ சிப்பாய்ப் புரட்சி’ வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சிறியவையும் பெரியவையுமாக எத்தனை எத்தனையோ பயங்கரப் போர்கள் நடைபெற்றன. அந்தப் போர்களிலே பாரத மன்னர்களின் தலைகளைப் பந்தாடினார்கள் பரங்கியர்கள்! அரியாசனத் தமர்ந்து அரசாளும் உரிமையையும் தங்கள் வர்த்தகச் சரக்காக்கி ‘ஏலத்’தில் விட்டார்கள்! இங்கு மங்குமாகப் பரங்கியர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு சில சுதேச மன்னர்கள், தங்கள் சகோதர மன்னர்களாளேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்நியர்களால் மிகக் கொடுமையாகப் பழிவாங்கப்பட்டார்கள். இதற்கு பாஞ்சால்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், சகோதர மன்னர்களான புதுக்கோட்டை, எட்டயபுரம் அதிபதிகாளால் காட்டிக் கொடுக்கப்ட்டதை சான்றாகக் கொள்ளலாம்.

பாரத்தில் புகுந்து, அதனை அடிமைப்படுத்த முயன்றவர்கள் பிரிட்டிஷ் - பிரெஞ்சு - டச்சு - போர்ச்சுகீசு எனப் பல நாட்டினராயினும், அவர்களிடையே நடைபெற்ற போட்டி — போராட்டங்களில் இறுதியாக வெற்றி பெற்றவர் பிரிட்டிஷாரே ஆவர். சில சின்னஞ் சிறு பகுதிகள் நீங்கலாக, பாரதம் முழுவதையுமே பிரிட்டிஷார் கைப்பற்றிக்கொண்டனர்.

இதற்கு முன்னறே 1755- ஆம் ஆண்டு ஒலித் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல் பின்னர் பலமுறை எதிரொலித்தது. 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் தெற்கிலும் அன்றே ராக்கெட் தயாரித்த மாமன்னன் திப்புசுல்தானும் ராணி லட்சமிபாயும்

பாம்பின்வாய்த் தேரை

பாபம்பின் வாய்ப்பட்ட தேரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்படுவதுபோல், ‘ஆங்கிலேயர் ஆதிக்கம்’ என்னும் மலைப் பாம்பின் வாய்ப்பட்ட பாரதம், கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டது. அதனை முற்றிலும் தன் வயிற்றுக்குள் கொண்டு செல்ல ஒரு நூற்றாண்டுக் காலம் பிடித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு. ஆம்; ஒரு நூற்றாண்டுக் காலம் தன் சுதந்திரத்துக்காகப் போராடிய பிறகே பிரிட்டிஷ் பேரரசுக்குப் பாரதம் அடிமைப்பட்டது. இது, பாரத மக்கள் பெருமைப்படத்தக்க செய்தியாகும். .

1857ல் துவங்கிய ‘சிப்பாய்ப் புரட்சி’ தோல்வியுற்ற பின்னர், பாரதம் முழுவதிலும் ‘ சுடுகாட்டு அமைதி’ நிலவியது. அந்த அமைதி கால் நூற்றாண்டுக் காலம் நீடித்தது. அதன் பின்னரே. சட்ட ரீதியான முறையில் காங்கிரஸ் மகாசபையின் மூலம் பாரத்தில் தேசிய எழுச்சி தோன்றியது.

மத உணர்ச்சி

பாரதம் ஒரு நூற்றாண்டு காலம் போராடிய தென்றால் அதற்கு முக்கியமான காரணம், பாரத மன்னர்களின் அரசியல் உணர்ச்சியைவிட, மக்களின் மத உணர்ச்சியேயாகும். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு அந்நிய நாட்டினராக இருந்ததோடன்றி, இந்த முஸ்லிம்–சீக்கியர்களுக்கு அந்நிய மதத்தினராகவு மிருந்தனர். அதனால், “அந்நிய நாட்டினருக்க அடிமைப்படுகிறோம்,” என்பதிலிருந்த வெட்கத்தைவிட, “அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுகிறோம், ” என்ற வேதனையையே ஒரு நூற்றாண்டுக் காலம் போராடுவதற்கான ஆற்றலைப் பாரத மக்களுக்குத் தந்தது. ஆம், அன்றைய தேசியம் மதச் சார்டபுடையது. அதனால், பாரத மன்னர்களின் எதேச்சாதிகாரக் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த மக்கள், அரசுரிமை பறிபோவதைவிட, அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுவதையே பெருத்த அவமானமாக, அநீதியாக, அடிமைத்தனமாகக் கருதினர்.

இந்த உணர்வு காரணமாக, இந்து — முஸ்லிம் — சீக்கிய மதங்களைச் சார்ந்த மக்களுள் மிகப் பெரும்பாலோர் ஒரே அணியில் நின்று போராடினர், இதனை, 1857ல் நிகழ்ந்த ‘ சுதந்திரப் புரட்சி’ யின் வரலாறு புலப்படுத்தும்.

1757-க்கும் 1857 இடையிலுள்ள ஒரு நூற்றாண்டில் அரசியல் துறையில் ஏற்பட் மாறுதல் மதத்துறையிலும் மகத்தானதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அந்நாளில், மதம் வேறு, அரசியல் வேறு என்ற உணர்வு இந்திய மன்னர்களிடமோ, மக்களிடமோ இருக்கவில்லை. அதாவது, ‘சமயச் சார்பற்ற அரசு’ என்ற சித்தாந்தம் நடைமுறையிலில்லை. அரசியலும் மதமும் பின்னிப் பிணைந்து கிடந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியலும் இதற்கு விலக்காக இல்லை.

மதமும் அரசியலும்

இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் பெற்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தங்கள் அரசியல் அதிகாத்தைப் பயன்படுத்தி இந்தயாவில் கிறத்துவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஏன்? இந்தியாவையே கிறித்துவ நாடாக மாற்றிவிடவும் திட்டமிட்டனர்.

பிரிட்டிஷார் பாரத்தில் காலூன்றுவதற்கு முன்பு, உள்நாட்டு மன்னர்கள் , தத்தம் மதங்களைப் போற்றி வளர்த்தனர்; பிற மதங்களையும் மதித்து நடந்தனர்; மதாசாரியர்களைக் கெளரவித்து, அவர்களுடைய அறிவரைகளைக் கேட்டு, அதன்படி ஆட்சி நடத்தினர்; மதாசாரியர்களைக் கெளரவித்து, அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி ஆட்சி நடத்தினர்; அரசவையிலே, சமயப்புலவர்கள் ‘ஆஸ்தானப் புலவர்களா’க இருந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையால் இந்த நிலைமை மாறியது.
புதிதாக உருவெடுத்த பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியல் ஆதிக்கம், கிறித்துவ மதத்தின் வளர்ச்சியைக் கருதியதால், உள்நாட்டு மதங்களை, மதாசாரியர்களைப் புறக்கணித்து, அவமதித்ததது இதனால், இந்து — முஸ்லீம் — சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்களிடையே வெறுப்பு வளர்ந்தது. அது, நாளடைவில் கிறித்துவ ஆட்சிக்கு எதிரான வெறியாகவும் மாறியது.

‘கடவுள் சித்தம்’

கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகள் சிலரும், இந்திய பாதிரிமார்கள் சிலரும் வெளியிட்ட கருத்துக்கள், இந்தியர்களிடையே வளர்ந்திருந்த வெறுப்பை அதிகரிக்கச் செய்தது.
“பரந்த இந்துஸ்தான சாம்ராஜ்யத்தைக் கடவுளே நம்மிடம்ஒப்புவித்துள்ளார். இந்தியாவின் ஒருமுனையிலிருந்து மற்றொரு மனைவரையில் கிறித்துவக் கொடி பறக்கவேண்டு மென்பதே அவரது கட்டளை. அந்தக் கட்டளை நிறைவேற ஒவ்வொரு ஆங்கிலேயனும் தன் முழுச் சக்தியையும் உபயோகிக்க வேண்டும். இந்தியவை ஒரு கிறித்துவ நடாகச் செய்யும் விஷயத்தில் அணுஅளவும் தயக்கமோ, தாமதமோ கூடாது.”
–வீர சாவர்க்கரின் ‘எரிமலை,பக்.44.

இது, பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி டைரக்டர்போர்டின் தலைவர் மாங்கிள்ஸ் என்பார், பிரிட்டிஸ் பாராளு மன்றத்தில் தெரிவித்த கருத்தாகும்.

கென்னடி என்ற ஓர் ஆங்கிலப் பாதிரியார் வெளியிட்ட கருத்துவருமாறு:
“நமக்கு எவ்விதக்கஷ்டம் நேர்ந்தாலும், எவ்விதத் துரதிருஷ்டம் நேர்ந்தாலும் இந்தியாவில் நமது சாம்ராஜ்யம் இருந்து வரும்வரையில், அங்கு நமது முக்கியமான கடமை கிறித்துவ மதத்தைப் பரப்புவதுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கன்னியாகுமரியிலிருந்து இமாசலப் பிரதேசம் வரையில் இந்துஸ்தானம் முழுவதும் இந்து — இஸ்லாம் மதங்களைக் கண்டித்து, எல்லோரும் கிறித்துவ மதத்தைத் தழுவச் செய்யவேண்டும். அதுவரையில் நம் முயற்சிகளை நாம் இடைவிடாது செய்து வரவேண்டும். அதற்காக நாம் எல்லாவித முறைகளையும் கையாள வேண்டும். நமக்குள்ள சக்தி முழுவதையும் உபயோகிக்க வேண்டும். இந்தியா கீழ்த்திசையிலேயே கிறித்துவ மதத்தின் ஒரு பிரம்மாண்டமான கோட்டையாகிவிட வேண்டும். அதுவரையில்நமதுமுயற்சி சிறிதும் தளரக்கூடாது. நாம் விடாமுயற்சியுடன் இருந்து வருவோமானால், இறுதியில் கடவுள்நமக்கு வெற்றியைக் கொடுத்தே தீருவார்.”
–’எரிமலை’பக்.45.
ஆங்கிலமும் அதற்கே!

“ஆங்கிலக் கல்வியார் நமக்குப் பல நன்மைகள் ஏற்பட்டன” என்று ஓயாது இன்றும் கூறப்படுகிறது. அந்தக் கல்விமுறையின் கர்த்தா லார்டு மெக்காலே ஆவார். அவர்,
“நமது கல்வித் திட்டமானது, வழுவின்றிப் பின்பற்றப்படும் பட்சத்தில், இன்னும் முப்பதாண்டுக் காலத்துக்குள் வங்காளத்தில் ஓர் இந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்க மாட்டான் என்பது என் உறுதியான நம்பிக்கை.”
–’எரிமலை’பக்.44.

என்று 1836-ஆம் ஆண்டில் வங்காளத்தில் முதன் மதலாக ஆங்கிலக் கல்வி முறை ஆரம்பமானபோது கூறினார்.
மெக்காலே மிகுந்த எச்சரிக்கையுடன், “இந்தியர்களெல்லாம் ஆங்கிலக் கல்வி முறையால் கிறித்துவர்களாக்கப்படுவார்கள்,” என்று சொல்லாமல், ‘இந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்கமாட்டான்’ என்று கூறினார். ஆம்; ஆங்கிலக் கல்வி, மதத்துறையில் ‘இரண்டுங்கெட்டான்’களைச் சிருஷ்டிக்கும் என்றார். இன்றும் நாம் காணும் காட்சி அதுதானே!

மதம், அரசியால் கருவி !

பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய்க் கிறித்துவ மதத்தைப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள், கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலெ போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான பாதிரிகள் ஆகிய ஆங்கிலேயர் எல்லோரும் ஒரு மனத்துடன் - முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர்.

கிறித்தவப் பாதிரிமார்கள் இஸ்லாம் - இந்து மதங்களுக்கு எதிராக நடத்திவந்த பிரசாரப்போருக்குத் துணை புரியும் பொருட்டு,”இந்தியர் யாரும் சொந்தத்தில் அச்சகம் நடத்தக்கூடாது,” என்று தடை விதித்தது பிரிட்டிஸ் கம்பெனி. இந்தத் தடை 1835- ஆம் ஆண்டுவரை அமுலில் இருந்தது. அச்சகத்தை நடத்தும் உரிமை ஆங்கிலேயருக்கு ஏக போகமா யிருந்ததால், அச்சுப் பிரசரங்களின் மூலம் தங்கள் சமயவளர்ச்சிக்குப் பாடு படும் வாய்ப்பு இந்திய மக்களுக்க இல்லாம லிருந்தது. தாங்களே படைத்துக்கொண்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியர்களைக் கிறித்துவர்களாக மாற்ற முயன்றனர் பாதிரிகள்.

‘கொழுப்போ, கொழுப்பு!’

இந்த நேரத்தில் இராணுவத்தின ரிடையே, எரியும் தீயில் எண்ணெய் விட்டதுபோல ஒருசம்பவம் நிகழ்ந்தது. அதனை, வீர சாவர்க்கார், கீழ்வருமாற வருணிக்கின்றார்:

“கொழுப்புத் தடவப்பட்ட புதிய தோட்டாக்களை, இந்திய சிப்பாய்கள் உபயோகித்துத் தீர வேண்டும் என்று கட்டளைகள் பிறந்தன. புதிய தோட்டாக்களை அபரிமிதமாக உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளும் பல்வேறு இடங்களில் திறக்கப்ட்டன. தோட்டாக்கள் மிருதுவாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதற்காக ஒரு விதக் கொழுப்பை உபயோகித்தனர். அக்கொழுப்பை ஏற்கனவே கையால் அகற்றியது போல அகற்றக்கூடா தென்றும் அதைப் பல்லால் கடித்த அகற்றவேண்டு மென்றும் உத்தரவிட்டனர். எவ்விதம் பல்லால் கடித்து அதைச் சலபமாக அகற்றலா மென்பதும் சிப்பாய்களுக்கக் கற்பிக்கப்ட்டது.

“அதிகாரிகள் தோட்டாக்களுக்கு ஆட்சேபகரமான கொழுப்பைத் தடவியதுடன், ‘முட நம்பிக்கை காரணமாக அவைகளைக் கடிக்குமறுக்கும் சிப்பாய்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்’ என்றும் பயமுறுத்தினர்.”
–’எரிமலை’பக்.54.
இந்த நிகழ்ச்சி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியச் சிப்பாய்களிடையே மகத்தானதொரு ஆவேசத்தைக் கிளப்பி, மதஉணர்ச்சி கலந்த அரசியல் புரட்சிக்கு அடி கோலிவிட்டது. அது காரணமாக வீறிட்டெழுந்த ‘சிப்பாய்ப் புரட்சி’ சுமார் ஓராண்டுக் காலம் பிஷாவர் முதல் கல்கத்தாவரை உள்ள வடபாரத்தின் பெரும்பகுதியில் நடைபெற்றது. அதில், இந்து - முஸ்லிம் கலான மன்னர்கள, இராணுவத் தளபதிகள், மெளல்விகள், புரோகிதர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் பங்கு கொண்டனர்.

அரசியல் பிரகடனம்

மக்களின மத உணர்ச்சி புண்படுத்தப்பட்டதை உணர்ந்த பிரிட்டிஷ் சக்கரவர்த்தினியான விக்டோரியா ராணியார், புரட்சியை ஒடுக்கும் உள்நோக்குடன் ஒருபிரகடனம் வெளியிட்டார். அதில் ,”கிழக்கிந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்ட சமஸ்தானங்கள் போக, எஞ்சியுள்ள சமஸ்தானங்களின் ‘சுதந்திர அந்தஸ்து’ அங்கீரிக்கப்டும். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களின் மத விஷயங்களில் தலையிடாது. கல்வி, திறமை, யோக்கியப் பொறுப்புள்ளவர்கள் யாராயினும், சாதி–மத வேற்றுமையின்றி அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப்படும்” என்று உத்தரவாதம் கொடுத்தார். இந்தப் பிரகடத்துக்குப் பிறகு, மதமும் அரசியலும் கலந்து நிகழ்ந்த ‘சுதந்திரப் புரட்சி’ பிசுபிசுத்துவிட்டது.

1757- ஆம் ஆண்டு முதல் 1857- ஆம் ஆண்டு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரத மக்கள் அரசுரிமையை இழந்ததோடு, மத உரிமைகளையும் இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இரையாயினர். பிரிட்டிஷ் அரசியாரின் பிரகடனத்தால் பாரதத்தின் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கைக்கு மாறியது. அதனால், மதத் துறையில் இந்திய மக்களின் நிலைமை மாறியதென்றாலும், அரசியல்- பொருளாதாரத் துறைகளில் அடிமைத் தனம் முன்னிலும் மோசமாக உறுதியடைந்தது.

மதத்தில் மறுமலர்ச்சி

‘தீமையில் விளைந்த நன்மை’போல, பாரதம் அரசியல் — பொருளாதாரத் துறைகளிலே அடிமைப் பட்டதென்றாலும், அதன் விளைவாகவும் ஒரு ‘நன்மை’ ஏற்படத்தான் செய்தது. ஆம்; மதத்துறையில் ‘மறுமலர்ச்சி’ தோன்ற வழி பிறந்தது. இந்து மதத்திலுள்ள பழைய நம்பிக்கைகளுக்கு, பழக்க வழக்கங்களுக்கு ‘முடநம்பிக்கைகள்’ எனப் பெயர் வைத்து, அவற்றிற்கு எதிராகப் பிரசாரப் போர் நடத்தினர் கிறித்தவப் பாதிரிகள். அதனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பின்றி வளர்ந்த புரோகித மதம் எதிர்ப்பைக் கண்டுவிட்டது.

சாதியால்–மதத்தால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடையே கிறித்தவப் பாதிரிகளின் பிரசாரம் உள்ளொளியை ஏற்படுத்தியது. பாதிரிகள் வெறும் மதப் பிரசாரத்தோடு நின்று விடாமல், தாழ்த்தப்பட்டுக் கிடந்த இந்து மக்களை அணுகி, அவர்கள்பால் அன்பு காட்டி, ஆக்கவழியிலும் தொண்டு புரிந்தனர்; கல்வி, சுகாதாரம், குடியிருப்பு ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்க உதவிபுரிந்தனர். இதனால் சேரிகளிலும், குடிசைப் பிரதேசங்களிலும் பல நூற்றாண்டுகளாகச் ‘சிறை’ வைக்கப்பட்டிருந்த இந்துக்களுள் பலர் கிறித்தவ மத்தில் சேரலாயினர். அவர்கள்எண்ணிக்கை கொஞ்சமன்று; கோடி, கோடியாகும்.

‘இந்தியாவில் ‘ ஏற்றபட்ட இந்த மாறுதல், இந்து மதத்திலுள்ள படித்தவர் சிலரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்யவேண்டும் மென்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. இந்துக்களிடையே உள்ள தத்துவ பேதங்கள், மத பேதங்கள், சாதி பேதங்கள்– காரணமாக, இந்தியச் சமுதாயம் ஒற்றுமையின்றிச் சுக்குநூறாக உடைபட்டுக் கிடப்பதை உணர்ந்தனர்.

1757-முதல் 1857-வரையுள்ள ஒரு நுற்றாண்டுக் காலத்திலேயே, மதமாற்றம் அதிகரித்தது. அதன் விளைவாக, படித்த இந்துக்களிடையே மனமாற்றம் ஏற்படலானது. கிறித்து மதத்தின் வளர்ச்சியால் இந்து மதம் நலிவதுபற்றியோ, அந்த மதத்தின் துணைகொண்டு காலூன்றிய பிரிட்டிஷ் ஆதிக்கம் இழைக்கும் இன்னல்கள் பற்றியோ சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து சாதாரண மக்கள் அதிகமாகக் கவலைப்படவில்லை. காரணம், அவர்களெல்லாம் ஏற்கனவே உள்நாட்டவராலேயே சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்ததுதான். இந்த நிலை, சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த படித்த மக்களுள் சிலரையேனும் சிந்திக்கவைத்தது. உயர்தர – நடுத்தர மக்களுள் சிலரிடையே தோன்றியிருந்த இந்தப் புத்துணர்ச்சி, மகத்தான தொரு சமயப் புரட்சி நடத்தும் தலைவர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலையைத் தேர்ற்றுவித்தது. பின்னே தோன்றவிருந்த அரசியல் புரட்சிக்கு முன்னோடியாகச் சமயப் புரட்சி ஏற்படவேண்டு மென்பது தெய்வத்தின் திருவுள்ளம் போலும்!

இந்தச் சூழ்நிலைக்கு மற்றோரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. அதனை உருவாக்கிய பொறுப்ப, பாரதத்தின் மீது படையெடுத்த இஸ்லாமிய மன்னர்களுடையதும், இஸ்லாமிய மதத்தினடையது மாகும். அந்தவரலாற்றுப் பின்னணியை இங்குச் சருக்கமாகவேனும் கூறுவது அவசியமாகும்.

‘கஜ்னி பாதை’

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆப்பானிஸ்தானத்திலிருந்து பாரதத்தின் மீது முதன் முதலாகப்படையெடுத்தான் கஜ்னி முகம்மது, அவன், தொடர்ந்து பதினேழுமுறை பாரதத்தைத் தாக்கினான். அவற்றில்,” சோமநாதபுரப்படையெழுச்சி’ இந்தியக்கலாசாரத்தின் மீது விழுந்த பயங்கரத் தாக்குதலாகும். சோமநாதரின் விக்கிரகத்தை உடைத்துப் பெரும்பொருள்திரட்டிக்கொண்டு தனது நாட்டுக்குத் திருப்பிச் சென்றான் கஜ்னி முகம்மது. இப்படிச் செய்வது எல்லா மதங்களையும் சாரந்த மன்னர் பெருமக்களின் ‘யுத்த (அ)நாகரிக’ மாகும். ஆயினும், இஸ்லாமியனான கஜ்னி முகம்மதின் வெறிச்செயல் இந்துக்கள் நிறைந் பாரத்தில் மதரீதியான பெரும் போருக்கு வித்தாகிவிட்டது.

பாரத்தின் தெய்விகக் கலாசாரத்திற்குக் கஜ்னி முகம்மது தந்த அடி, இந்து சமயவாதிகளை விழித்தெழச் செய்தது. கஜ்னி முகம்மது காலம் தொடங்கி அடிக்கடி பாரதத்தின் மீது ஏற்பட்ட இஸ்லாமியரின் படையெடுப்புகள், பாரத மக்களின் அரசியல் உரிமைகளை மட்டுமல்லாமல், மதவழிப்பட்ட கலாசார உரிமைகளையும் தாக்குபவையாக இருந்தன.

போர் வாழ்க்கை!

அதனால், கி.பி. பதினோராம்நூற்றாண்டு தொங்கிப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரையுள்ள சுமார் 750 ஆண்டுகளில், வட பாரத மக்கள், தங்கள் அரசுரிமையையே யன்றி, கலாசார உரிமையையும் காத்துக் கொள்ளப் போராடினார்கள். அதனால் அந்தத் துரதிர்ஷ்ட சாலிகளுக்குப் போர் புரிவதே ‘வாழ்க்கை’யாக இருந்தது! அந்தப் போரில் இருதரப்பிலும் மக்கள் சிந்திய செந்நீரும் கண்ணீரும் கலந்து ஆறெனப் பெருகி ஓடியதெனலாம். நீண்ட காலம் உடலில் தொடந்துவிட்ட நோய், மருத்துவக் கலையையும் புறங்கண்டு விடுவது போல, பாரத்தில் இந்து - இஸ்லாமிய மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நடந்த போர், அவர்கள் பின்பற்றிய மதங்களின் அற நெறிகளையும் புறங்கண்டு விட்டது.

அடிச்சுவடும் அழிந்தது!

வந்தேறிய முஸ்லிம் சமுதாயத்தினர் (முஸ்லிம் மன்னர்களுடன் பல ஆயிரம் முஸ்லிம் மக்கள், அதிகாரிகள் , பணியாளர்கள் வந்தனர் , அவர்கள் தான் வந்தேறிகள் .தஞ்சையில் மராட்டிய மன்னன் ஆட்சி செய்த காலத்தில் தனது மக்களை அதிகாரிகளாகவும் , பணியாளர்களாகவும் கொண்டு வந்து இன்றும் அவர்கள் இங்கு தான் இருக்கின்றனர் அதுபோலத்தான் முஸ்லிம் மக்கள், மற்றவர்கள் மாதமாறிய நமது நாட்டு மக்கள்) அல்லது அவர்கள் வழியில் தோன்றிய மக்கள், தங்கள் பூர்வதேசத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாதபடி அவர்களுடைய முன்னோர்கள் வந்த அடிச்சுவடும் அழிந்து போய்விட்டது. ஆம்; ஆக்கிரமிப்பாளர்கள் துவக்கிவைத்த போரை, அவர்கள் மறைந்த பின்னரும் அவர்களுடைய வழி வழிச் சந்ததிகள் தொடர்நது நடத்தியதால், அதன் மீது படிந்திருந்த ‘அந்நிய’த்தன்மை அழிந்து, ‘உள் நாட்டுப் போர்’ என்று சொல்லத்தக்க நிலைக்கு மாறுதல் அடைந்து விட்டது. இந்தப் பரிதாப நிலை, பாரத நாட்டிற்குச் சரித்திரம் கொடுத்துவிட்ட சாபம்! இந்தச் சாபம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார் வரும் வரை நீடித்திருந்தது. வந்தவர்கள் நிலை பெறுவதற்கும் உதவி புரிந்து விட்டது.

இந்து - முஸ்லிம்மக்களிடையே நிலவிய விரும்பத்தகாத மதப் பகைமையைப் பயன் படுத்தி, தங்கள் கிறித்தவ மதத்தையம் பிரிட்டிஷ், பேரரசையும் பாரதத்தில் நிலைநிறுத்த முயன்றனர் கிறித்துவப் பிரசாரகாரகளும் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆதிக்கம், படிப்படியாக வளர்ந்து - வலுப்பெற்று, 1857ல் வெளியான விக்டோரியா மகாராணியார் பிரகடத்தின் விளைவாகப் பூரணத்துவம் பெற்றது.

கவிஞரின் கண்ணீர் !

இப்படி, இஸ்லாமிய கிறித்தவ சமுதாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இராணுவ ரீதியில் பாரதக் கலசாரத்தின் மீத படையெடுத்தப் போரிட்ட காலத்தில், மக்கள் பட்ட அல்லல்களைக் கண்ணீரால் கவிதை தீட்டிக் காட்டுகின்றார் பாரதியார்.

பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்த காலை, பாரதத் தாய் வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் பாவனையில் கவிதை எழுதியுள்ளார் பாரதியார். அந்தக் கவிதையிலே,
” செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில”

என்று கூறி, மொகலாயர் படையெடுப்பாலும் , அவர் தம் ஆட்சியாலும் பாரத மக்களுக்குற்ற அல்லல்களை உரைத்து, பிரிட்டிஷாரின் வருகையால் அந்தப் பழைய கொடுமைகள் அகன்றன என்பதனை,

“மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின,
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற்று உய்வ ராயினர். எனவே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிதர லுற்றனள், பொருள் செயற்குரிய
தொழிறகணம் பலப்பல தோன்றின; பின்னும்
கொடுமதப்பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.
ஆயினும் என்னை? ஆயிரம் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை.”

என்று பாடி, இஸ்லாமியர் படை யெடுப்பால் விளைந்த கேடுகளுள் சில பிரிட்டிஷாரால் நீக்கப்பட்டனவாயினும், பல கேடுகள் இன்னும் நிலைத்தே நிற்கின்றன என்கின்றார். பிரிட்டிஷாரின் வருகையால் விளைந்த நன்மைகளைக் கூறிய அவர், அவர்களுடைய ஆதிக்க வெறியால் இந்து - முஸ்லி மக்களுக்கு விளைந்த புதிய கேடுகளையும் கூறுவாராகி,

“நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்,”

என்று பாடுகின்றார்.

இந்தச் சூழ்நிலையில், மத வெறியை அழித்து, மத நெறியை வளகர்க்கும் மகான்கள தேவைப்பட்டனர். இந்து - முஸ்லிம் - கிறித்தவ மதங்கள் ஒன்றுக் கொன்று எதிரும் புதிருமான இராணுவ முகாம்களக விளங்கிய அவல நிலையை மாற்றி, அவற்றிடையே சமரச மனோபாவத்தை வளர்க்கத்தக்க சன்மார்க்க ஞானியார் தேவைப்பட்டனர். சுருங்கச் சொன்னால்.

பிற சமயங்களின் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த பாரதக் கலா சாரத்தைக் காக்கவும்,

இந்து - முஸ்லிம் - கிறித்தவ - சீக்கிய சமயங்களிடையே ஒரூமைப்பாடு காணவும்,

இந்துக்கிளடையே நிலவிய மூட நம்பிக்கைகளை, சாதி வழிப்பட்ட உயர்வு - தாழ்வு மனப்பான்மைகளை, போலிவைதிகர்களின் புரட்டுச் சடங்குகளை அடியோடு அழிக்கவும் புரட்சிகரமான சீர்திருத்தவாதிகள் தேவைப்பட்டனர்.

இங்கே வெள்ளையர் ,கொள்ளையர் ,பரங்கியர், கும்பேனியர், சீமைக்காரன் என்றெல்லாம் நாம் சொல்கிறோமே!! அவனால் நமக்கு ஏற்பட்ட பயனைப் பற்றி யாராவது வாய்திறந்தார்களா ?. அந்த வெள்ளையன் என்ன செய்தான் ?, சிதரிக்கிடந்த குறு நில மன்னர்களை யெல்லாம் அழித்து ஒரே இந்திய யூனியனாக்குவதற்கு வழிகோளினான் ; சில மன்னர்களுக்கு சுதந்தரம் கொடுத்திருந்தாலும் , சுதந்திரப் போர் என்ற கோதாவில் நாம் சுதந்திரம் பெற்றபின் அவர்களது சமஸ்த்தானங்களை எடுத்துக்கொண்டோம் . வெள்ளையன் வரவில்லை யென்றால் சிதருண்ட நாடு சிறு சிறு நாடாக அனைவரும் முஸ்லிமாக ; முஸ்லீம் நாடாகவும் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு .அல்லது மதுரை இந்து நாடு தஞ்சை முஸ்லிம் நாடு என ஆகியிருக்கவும் வாய்ப்புண்டு. ஏன் என்றால் தென்னகத்தைப் பொருத்தளவில் ஆர்க்காட்டு நவாபு, திப்பு சுல்தான் போன்றவர்கள் வலிமைமிக்கவர்களாக இருந்தார்கள் . ஏன் ஆர்க்காட்டு நவாபு தான் தென்னகத்தில் கப்பம் பெற்று வந்து அந்த உரிமையை கும்பேனிக்கு கொடுத்தான்.

வள்ளலார் கண்ட ஒருமை பாடு என்ற புத்தகத்தில் இருந்தும்

அங்கெங்கு படித்ததிலிருந்தும்

New Page 2