புதுகை மன்னர்கள்

February 8, 2006

தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை.
‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன்’
என்பது விளக்கும். புதுக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த மன்னர்களின் வரலாறு சுருக்கமாக இங்கே கூறப்படும். ஸ்ரீரங்கராயலு என்னும் விஜய நகர அரசனது மதம் கொண்ட யானயை அடக்கிப் பல விருதுகள் பெற்ற ஆவடை ரகுநாத தொண்டைமானைப் பற்றி பின்னர் கூறுகிறேன். — தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்.
தொடரும் . . . ..

இரகுநாத தொண்டைமான் 2 - 1686 - 1730
புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர். மதுரையை ஆண்ட நாயக்கருக்காகத் திருவாங்கூர், மைசூர், தஞ்சாவூர் என்னும் இடங்களில் இருந்த அரசர்கள் மேல் படையெடுத்தச் சென்று அவர்களை வென்றனர். சொக்கநாத நாயக்கர் வலிமை மிகவது கண்டு அச்சமுற்றனராக, அக்கால் அவருக்கு முதல் மந்திரியாய் இருந்த கோவிந்தப்ப ஐயர் சூழ்ச்சியார் இவரது வலி குன்ற நேர்ந்தது, பின்பு, இவர் இராமநாதபுரம், தஞ்சை முதலிய இராச்சியங்களிலிருந்து திருமெய்யம், பட்டுக்கோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினார். 1717 - 1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் பதுக்கோட்டையில் அடைக்கலம் பகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்ட தலமுற வாழ்ந்து வந்தனர். இம்னமரது நடுவு நிமை கிறித்தவர்களை நடத்தினமுறைமையிலிருந்துஅறியக்கிடக்கின்றது. இவர் வீரத்தாலும், புய வலியாலும் மனவுறுதியாலும். நடுவு நிலையாலும் மிகவும் புகழ்வாய்ந்தவராவர். இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர் தம்பேர்களில் மூத்தவராகிய விஜயரகநாதராய தொண்டைமானுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.
தொடரும் . . . . .. . .

விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769

இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர், அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து மத விசாரணை செய்து வந்தனர். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் எய்தினார்.
1733-ல் தஞ்சை அரசரின் சேனைத் தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர்புரியமாலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக்கொண்டார் ஆயினும், நெடு நாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான். ‘கனத்த புகழ்படைத்த காளிக் குடிக்கோட்டையில், ஆனந்தராயனை அதிரவெட்டுந் தொண்டைமான்’ என்று பாடுவதும் உண்டு.
ஐதராபாத்து நைசாம் ( ஹைதராபாத் நிஜாம்) எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.
மகமதலிக்கும் சந்தாசாகிப்புக்கும் கர்நாடக இராட்சியவிடமாய் நடந்த பெயர் பெற்ற போரிலே இம்மன்னர் ஆங்கிலேயருடன் மகமதலிக்கு துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தனர். இந்த போரின் பயனாக இவருக்கு அனேக நாடுகள் சேர்ந்தன. நாவப்புக்கு திரைக் கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டனர் . இதனாலேயே தஞ்சாவூர் முதலியன அரசிழந்த காலத்திலும் புதுக்கோட்டை தமிழ் நாட்டின் ஒரே அரசாங்கமாக நிலைத்தது. பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் இம்மன்னர் ஆங்கிலேயரை பிரியாமல் அவர்கட்கே உதவி செய்து வந்தனர். இவர் தமது நுன்னிய அறிவினாலே ஆங்கிலேயரே வெற்றிபெறுவார் என்பதனை தெளிவாக உணர்ந்திருந்தார். புதுக்கோட்டை மேன்மையடைந்தது. ஆங்கில சேனாதிபதியாக (கர்னல்) லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார். அது
எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நண்மைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும் என்பது.
இவர் மதவிடங்களில் மிகப்பற்றுடையராயிருப்பது கொண்டே தமது இராச்சியத்தின்உள்விவகாரங்களை மறந்துவிடாது கவனித்து வந்திருக்கின்றார். புதுக்கோட்டை இராச்சியத்தை நிறுவினவர். ராயரகுநாத தொண்டைமான் எனின், அதை வலிமையுறச் செய்தவர் இம்மன்னரேயாவார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரையில் இடைவிடாது போரிலே காலங்கழித்து வந்த இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தனர். இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மாஆய் என்பவருக்குப் பிறந்தவர் அடுத்த மன்னராகிய இராயரகுநாத தொண்டைமான் என்பவர்.

இராயரகுநாத தொண்டைமான் 4 பகுதி (1769 – 1789)

இவர் , 1738-ல் பிறந்தார். தமது முப்பத்தோரவது ஆண்டில் பட்டத்திற்கு வந்தார். தம் முன்னோரைப் போன்றே ஆங்கிலேயரிட த்தில் நட்பு பூண்டிருந்தார்.1780-ல் ஐதரலி கருநாடக சமவெளி மீது ஓர் பேரிடிவிழுந்தாற்போலப் பாய்ந்து வந்த காலையில் ஆங்கிலேயர் இவ்விடுக்கணைத் தடுப்பதற்கு ஓர் உபாயமும் செய்யாதிருந்தனர். தென்னாட்டுத் தலைவர்கள் யாவரும் ஐதலியுடன் சேர்ந்து கொண்டனர். இம்மன்னர் ஒருவரே ஆங்கிலேயர்க்கும், நவாப்புக்கும் உதவியாய் நின்றனர். ஐதரின் சேனையானது ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டடை நாட்டில் புகுந்தபோது இவருடைய சேனை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது இவ்வெற்றியைக் கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்:
“நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம்.. தாங்கள் இன்னம் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு.”
இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கற்பாலதன்று. ஐதர் தான் படையெடுத்துச்சென்ற நாடுகளில் ஊர்களைத் தீயிட்டும், மரங்களை வெட்டியும், பயிர்களையழித்தும் ஏரிகுளய்களின் அணைகளை வெட்டியும் கொடுமைகள் இயற்றிவந்தான். அன்றியும் பெண்டிக்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளானார்கள். இக்கொடியோனை முற்ற முறியடித்தற்கு இம்மன்னரே காரணமாய் இருந்தார். ஐதரலியின் மகனாகிய திப்புவுக்கு எதிராகவம் இவர் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. 1789 டிசம்பர் 30-ல் இவ்வரசர் விண்ணுலகடைந்தார்.

ராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 5 1789 – 1807

இவர், இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலைத்தொண்டைமானுடைய மூத்த புதல்வராவர். இவர் தமது முப்பதாவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 1790 ல் திப்புசுல்தான் திருச்சிராப்பள்ளிமேல் படையெடு்த்து வந்தகாலை இம்மன்னர் ஆங்கிலேயருக்குத் துணையாக நன்று அவனை மடக்கியடித்தார்.
1795-ல் ஆற்காட்டு நவப்பாகிய மகமதலி இவருக்கு ராஜாபகதூர் என்னும் பட்டத்தை அளித்தனன். அதனால் 1500 குதிரைப் படையும், கொடியும், முரசும், முடியும், பட்டத்து யானையும் வைத்துக் கொள்ள உரிமையுடையரானார்.
இவர் மூன்று கல்யாணம் செய்துக்கொண்டார். இவரது மூன்றாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளில் உயிருடன் இருந்த விஜயரகநாதராய தொண்டைமானும், ரகுநாததொண்டைமானும் முறையே 1807-லும், 1825-லும் மன்னராயினர்.
இவ்வேந்தர் சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் வானுலகெய்தினர். இவருடைய பத்தினியாராகிய ஆயிஅம்மாள் ஆய் என்பார் உடனட்கட்டையேறிவிட்டார்.

இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 6 (1807 – 1825)

இவர் பட்டத்துக்கு வந்தபொழுது பத்து வயதுள்ள சிறுவராய் இருந்த படியால் இவருடைய பங்காளி விசய ரகுநாத தொண்டைமான் அரச காரியங்களை நடாத்தி வந்தார், அப்பொழுது புதுக்கோட்டையில் நவாப்புக்குள்ள உரிமை மாறி ஆங்கிலேயரைச் சார்ந்ததனால் இவருடைய அரசவுரிமையை ஒப்புக்கொள்ளும்படி வியரகுநாத தொண்டைமான் ஆங்கில அரசாங்கத்தினரைக் கேட்டுக்கொண்டார். ஒப்புக்கெர்ணபின், இவருக்க முடிசூட்டுவிழா பதுக்கோட்டை நகரில் மிக்க சிறப்புடன்நடைபெற்றது. இவர் காலத்து மேஜர் ப்ளாக்பர்ன் என்னும் ஆங்கிலேயர் புதுக்கோட்டைக்கு ரெசிடெண்டாக இருந்து அரசாங்கத்தைச் சீர்திருத்தி மிகவும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார், கழந்தைகளாகவிருந்த விஜய ரகநாதராய தொண்டைமான், இரகுநாத தொண்டைமான் இருவரும் வடமொழி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலான மொழிகளும், குதிரையேற்றமும், வில்வாட் பயிற்சியும் ்பயிற்றுவிக்கப்பெற்றனர்.
இம்மனர் காலத்துத்தான் புதுக்கோட்டை ஐந்து தாலுகாக்ளாகப் பகுக்கப்பட்டது; நீதிமனறங்கள் நிறுவப்பட்டன; வரி வாங்குதற்கு அதிகாரிகள் நியமிக்கப்ட்டனர். அரசாங்கத்திற்கு வேண்டிய மற்றைக் காரியங்களும் செய்யப்பெற்றன.
1812-ல் புதுக்கோட்டை நகர் தீக்கு இரையாயிற்று, இவ் பொழுதுள்ள அழகிய நகரம் பின்பு கட்டப்பெற்றது. 1812-ல் இம்மன்னருக்கும், இவர் தம்பியார்க்கும் மணம் நடைபெற்றது. 1817 முதல் இவர் பூரண சுதந்திரமுடையராய் ஆட்சி புரியலானார். இவருக்கு இருமனைவியர் உண்டு.
இவர் 1825-ல் உலக வாழ்க்கையை நீங்கவே இவரது தம்பியாகிய இரஜநாத தொண்டைமான் முடி சூட்டிக் கொண்டார்.

ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் 7 (1825 – 1839)

இவர் மிகச் சிறந்த நீதிமன்னர். பற்பல அறங்களை நடத்தினவர். 1830-ல் ஆங்கில அரசாங்கத்தாரால் ‘ஹிஸ் எக்சலென்சி’ என்னும் பட்டம் அளிக்கப் பெற்றனர்.
இவர் 1839 ஜுலை 13-ல் இம் மண்ணுலக வாழ்வை வெறுத்தேகினர்.

ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)
இவர் பட்டத்துக்கு வந்த காலத்தில் ஒன்பது வயதுள்ள சிறுவராயிருந்தார். 1844-ல் இருந்து தாமே அரசாண்டு வந்தார். 1866-ல் நீதிமன்றங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன.
1. அப்பீல் கோர்ட்டு
2. மூன்று ஜட்ஜிகள்உள்ள செஷன்ஸ் கோர்ட்டு
3. ஸ்மால் காஸ் கோர்ட்டு
4. ஐந்து முன்சீபுக் கோர்ட்டுகள்

இலாகாக்கள்:-
1.வரிவசூல் (ரெவின்யூ).
1. கிராமம்
2. தாலூகா
3. காவல்
4. சிறைச்சாலை
5.தபால்
6.பங்களா
7.மராமத்து
8.உப்பளம்
9.காடு
10.நீதிமன்றம்
11.ஸர்க்கில் ஆபீஸ்

இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபல் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது.
இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்.

ஹிஸ் ஹெனெஸ் ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886முதல்) 9
இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது.

உப்பு காய்ச்சலுக்கு ராயலிட்டி கேட்கப்போக இனாம் நிலத்துக்கும் நிலவரி விதித்து விட்டான் வெள்ளையன் பாருங்கள்
தொடரும் . . . . . . . .

1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரணமனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.
1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார்.
1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.

இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-

1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.
2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.
3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலை விலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.
4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.
5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.
6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.
7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.
8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.
9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார்.
10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.

தொடரும் . . . . . . . . . .
இவ்வரசர் மீது ‘ இயன்மொழி வாழ்த்து ‘ என்னும் ஓர் அழகிய தமிழ்ப் பிரபந்தம் ப்னனத்தூர் நாராயணசாமி ஐயர் என்னம் பலவரால் இயற்றப்பெற்று , மகா மகோபத்தியாய உ.வே. சாமிநாத ஐயர் அவரக்ளின் சாத்துக் கவியுடன் வெளிவந்துள்ளது.
அதிலே இவ்வேந்தர் பெருதைமகள்,
‘ தானந் தனியருள் ஞான முதலன
வுரிய நாயக னுத்தம குணநிதி
பெரியநா யகிபதம் பிரியா வுளத்தன்மு
னவிலும் விசயரகு நாதன் மகன் மக
னிவநெனக் கன்ன னிவனென நுவலும்
கராமடிந் திடச்சக் கரப்படை விடுத்த
இராம சந்திர வேநதல்சேயென
ஓராயிரந் தண்கதி ரொன்றா யுதித்தென
அராவணை யமல னருளொருங் குதித்தெனக்
குராவணி குமரவேள் குவலயத் துதித்தெனப்
பாராவருந் தருமம் பாரில் முளைத்தெனச்
சராசன மதனன் றனிவடி வெடுத்தென
இராசமுண் டலத்தி விவற்கிணை யிலையெனச்
சராதி டராசன் றொல்குலம் விளங்கத்
தராதவலம் விளங்கத் தவநெறி விளங்கப்
புராதன நான்மறை மபுவியிசை விளங்க
ஆவிர்ப் பவித்த வாசர் சிகாமணி’
என்று இங்ஙனம் பலவாறு சுறப்பட்டுள்ளன.

மாட்சி பொருநட்திய விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் 1922 முதல்

இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர். காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிரவாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1990-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார். இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம். நகர சபையில் 8 அங்கத்தினரும், சட்டசபையில் 35 அங்கத்தினரும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட வேண்டியவராவர். இன்னும் நமது நாடு முழுதும் கட்டாய இலவசக்கல்வி ஏற்படுத்திப் பெரும் புகழுடன் இவ்வரசர் பெருந்தகை நீடுழி வாழ்வாராக.
ராஜா ராஜகோபாலத் தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.
இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.
1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலைவமதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.
ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.
ராஜகோபாலத் தொண்டைமானின் மருமகளாகிய திருமதி சாருபாலா தொண்டைமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மேயராக வெற்றி பெற்று உள்ளார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்ற இவரும் மக்கள் தொண்டில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

புதுக்கோட்டைக்கும் இராமநாதபுரத்திற்கும் ஓர் காலத்தில் ஒரு கல்யாண சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்று, புதுக்கோட்டை யரசர்களின் சம்பந்திகளாயுள்ளோர். மாங்காட்டான் பட்டி இராங்கியர், மேலைக் குறிச்சி இராங்கியர், கல்லாக்கோட்டை சமீன்தார் சிங்கப்புலி ஐயா, காட்டுக்குறிச்சிப் பன்றிகொண்டார், நெடுவாசல் சமீன்தார் பன்றிகொண்டார் முதலாயினார் ஆவர்.

புதுக்கோட்டை இராட்சிசயம் சிறிதாயிருப்பினும் தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு இதுவே தமிழ் நாட்டு அரசாங்கமாக விளங்கிவந்தது. தமிழ் மொழியைப் புரந்த அம்மன்னர்களைப் போலவே இவர்களும் இப் பொழுது புரந்து வருகின்றனர். சர் வில்லியம் பிளாக்பர்ன் கூறிய படி புதுக்கோட்டை மன்னர் மிகவும் அதிகாரமுள்ளவராவர் .
இது வரையில் வந்த வரலாற்று தகவல்களை ஐயா ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரம் என்ற நூலில் இருந்து தொகுக்ப் பட்டது.

மருது சகோதர்கள்

February 7, 2006

மருது பாண்டியர்கள்.
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.

ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.
இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.
ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.

மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்

ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.
தொடரும் . . . . . . . .

வீரமும் திறமையும் வெளிப்படுதல்

சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. .

முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்

சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.

இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.

வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.

இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3

விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.
இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.

சிவகங்கைச் சீமை மீட்பு - 4
1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு

அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்.”எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்”
என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.

அறப்பணிகளும் மக்கள் தொண்டும்

வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.

குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.

பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.

காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து
வீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:
மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.
அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.
காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம்
ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.
இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.

பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து

ஆங்கிலேய படையெடுப்பு - 5
இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.

போர் பிரகடனம்:

சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.
இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.

இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.
அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.
புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.
அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.

தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.
24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.

நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..

THREEN CHINNAMALAI

தீரன் சின்னமலை

ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை - பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை.

இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம்.

இளவயதிலேயே தம்பியர் பெரியதம்பி, கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் சின்னமலை கற்றுத் தேர்ந்தார்.

மதுரை நாயக்கர் வசமிருந்த கொங்கு நாட்டுப் பகுதியை மைசூரார் கைப்பற்றியதால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். வரி தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் ‘சின்னமலை’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். மலையாளத்திலும் சேலம் பகுதியிலும் காலூன்றிய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

7.12.1782 இல் ஐதர்அலி மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து ‘வெள்ளைத்தொப்பியரை’ எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் ‘கொங்குப்படை’ சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளன் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக் கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. மக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.

சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.

எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் (??!), சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார்.

சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார். முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உருவாகி வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

VELU NAACHIAR

வீரமங்கை வேலு நாச்சியார்

இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத மேந்திப் போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 1730 இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் ஆண் வாரிசாக வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

1772ல் வெள்ளைக்கார வெறியர்களின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வீரத்தாய் வேலுநாச்சியார். வெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து அவருக்கே தெரிந்த உருது மொழியில், வெள்ளையர் எதிர்ப்பு பற்றி திறமையாக அழகுற பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட, ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.

ஏழாண்டுகாலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம்மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டுவயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகெங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சாகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

1780 ஐப்பசித் திங்கள் 5ம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகெங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி ஒத்துழைப்போடு பீரங்கிப்படை ஒன்றும் தரப்பட்டது. படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகெங்கையில் வேலுநாச்சியார் அவர்கள், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்டறை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்திரவிட்டார்.

இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது பெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது.

சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் ‘குயிலி’ என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

வேலு நாச்சியார் கைபட்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார். 1790-ல் அவரது மகளின் மறைவினால் மடைமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காகபிரெஞ்சு நாட்டுக்குச் சென்றார்.

1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தி மரணம் நாச்சியாருக்கு துயரம் அதிதமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களையும் சோதனைகளையும் சாதனைகளாக்கி, வீரசாகசங்கள் புரிந்து நாட்டை மீட்டிய வீரத்தாய்
25-12-1796 அன்று இறந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியலை அரசாங்கத்தின் ஆவணக்காப்பகத்தின் தக்க ஆதாரங்களுடன் உண்மையினை நாட்டிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள அன்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

1ம்….1728 - 1749…முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2ம்….1749 - 1772…சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3ம்….1780 - 1789…வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4ம்….1790 - 1793…இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5ம்….1793 - 1801…வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6ம்….1801 - 1829…கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின்
சுவீகார மைந்தன்
7ம்….1829 - 1831…உ.முத்துவடுகநாதத்வேர்
8ம்….1831 - 1841…மு. போதகுருசாமித்தேவர்
9ம்….1841 - 1848….போ. உடையணத்தேவர்
10ம்..1048 - 1863….மு.போதகுருசாமித்தேவர்
11ம்..1863 - 1877….ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12ம்..1877…………..முத்துவடுகநாதத்தேவர்
13ம்..1878 - 1883….துரைசிங்கராஜா
14ம்..1883 - 1898….து. உடையணராஜா
15ம்..1898 - 1941….தி. துரைசிங்கராஜா
16ம்..1941 - 1963….து. சண்முகராஜா
17ம்..1963 - 1985….து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18ம்..1986…………..முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

POOLIDEVAN

மாவீரன் பூலித்தேவன்

முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.

இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.

இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.

1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.

சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.

மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.

இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.

பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.

பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.

உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.

போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.

ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

தொடரும்…….
மாவீரன் பூலிதேவருக்குத்தான்ஒரு வீரனின் மதிப்பும் அவனுடைய இழப்பையும் உணரமுடியும் . அந்த வீரத்தளபதியின் நினைவாக பூலித்தேவர் வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தனார். பூலிதேவரின் இளம் வயது போர் வெற்றி அவருக்கு போர்க்கள நுணுக்கங்களில் மேலும் முதிர்ச்சியைக் கொடுத்தது.

மதுரையில் விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704-1731) ஆட்சிக்காலத்தில் மதுரையின் வட பகுதியில் புலி ஒன்று பதுங்கியிருந்தது. அவ்வழியாகப் போவோரையிம், வருவோரையும் கொன்று கொண்டிருந்தது. எவராலும் அடக்க இயலாது போன அந்தப் புலியை அடக்கு வோருக்கு தகுந்த சனமானம் வழங்கப்படும் என்று அனைத்துப் பாளையக்காரர்களுக்கும் ஓலை அனுப்பபட்பட்டது.

இச்செய்தியை அறிந்தவுடன் பூலித்தேவர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சிங்கம் போல் நடை நடந்து வரும் காலடி ஓசையைக் கேட்டவுடன் புலியனது பூலித்தேவர் மீது பாய்ந்தது. முதல் பாய்ச்சலுக்கு புலியிடமிருந்து ஒதுங்கியவர், இரண்டாவதாக பாய்வதற்கு முன்னர் சட்டென்று புலியின் மீது பாய்ந்து அதன் பின்னங்கால்களைப் பிடித்து தலைக்கு மேல் தூக்கி ஓங்கி தரையில் அடித்தார் . பூலித்தேவரின் வலிமையைத் தாங்க இயலாத புலி இரத்தம் கக்கி இறந்தது. புலிவேட்டை என்கின்ற பெயரில் பல வீரர்கள் துணையோடும். துப்பாக்கிகளோடும் பூலித்வேர் செல்லவில்லை. தனியொருவராக நின்று வென்றார்.

இதனால் இவருடைய புகழ் தென்னகம் முழுவதும் பரவியது. மதுரை மன்னனும். வடக்காத்தான் பூலித்தேவன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தான்.

பூலித்தேவர் சிறுவயது முதலே கடவுள் பக்தியுடையவராக இருந்தார். தாம் எவ்வளவுதான்வலிமையுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் மேல் ஒருவர் இருக்கின்றார் என்ற உணர்வுதான் அவரை சுயகட்டுப் பாட்டில் வைத்திருந்தது. இல்லை யென்றால் அவருக் கிருக்கும் ஆற்றலுக்கு அவர் மற்றவர்களைப் போல நாடு பிடிக்ககிளம்பியிருக்கக் கூடும்.

அவர் தன்னுடைய குல தெய்வமான உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். வேதியர்களைக் கொண்டு வேதம் முழங்கச் செய்து, தினந்தேறும் அன்னதானம் செய்து வந்தார், அதற்காக நிலங்களையும் மானியமாக மட்டுமே அரசராக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை பலவித கோயில்களுக்கு நற்பணி செய்து வந்தார்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தாரே தவிர தமக்கோ தம் சந்ததியருக்கோ சேர்த்து வைத்து சுகபோகமாக வாழவேண்டும் என்று நினைத்த தில்லை. தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவ நல்லூர் அர்த் நாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது.

கோவில் பணிகள் தவர மற்ற பொதுப் பணிகளான நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கு இளைப்பாற ஆங்காங்கே மண்டபம் கட்டுதல், சத்திரம் அமைத்து உணவு வழங்குதல், ஆங்காங்கே நீர் நிலைகள் அமைத்தல், வெட்டவெளி பிரதேசங்களில் மரங்கள் நட்டு நந்தவனமாக்குவது, மற்றும் விளைச்சல்பெருக கால்வாய்கள் அமைத்துபாசன வசதி பெருக்குவது என்று மக்களின் தேவை அறிந்து மன்னர் பணி செய்தார். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அடிப்படை வசதிகளைச் செய்ய ஜனநாயக அரசு தட்டுத் தடுமாறும் நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கையின்அரவணைப்பில், எந்த குறைகளும் இல்லாது வாழ்ந்த நிலையிலும் கூட, மேலும் மக்களுக்கு வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று நினைத்த மன்னருக்கு, இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கும் பொதுவுடமை சிந்தனைகள் சற்று அதிகமாகவே இருந்தது என்று தான் கூறவேண்டும்.

மன்னர் பூலித்வேருக்கு பொதுவுடைமை சிந்தனை மட்டுமல்ல, தொலைதூர நோக்கும் சற்று அதிகமாகத்தான் இருந்தது. பூலித்வேர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தகாலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்துஎன்பதை மன்னர் உணர்ந்தார்.

அதனால் அனைத்துப் பளையக் காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். இத்தகைய ஒரு கோணத்தில் இதுவரை சிந்திக் காத பிற மன்னர்களுக்கு, இந்தக் கருத்து புதியதாகவும் அதே சமயம் தவிர்க்க முடியாத தாகவும் இருந்தது.

ஆனால் நடைமுறையில் எத்தனை பேர் ஒத்துழைத்தனர் என்பது பிற்கால வரலாறு. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் நோக்கம், தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டும் அல்ல. தன் தாய்திருநாடு அன்னியர் வசம் சிக்கிவிக் கூடாது என்கின்ற தன்மான உணர்ச்சிதான். மேலும் அன்னியராட்சியில் குடிமக்களின் நலன் அவ்வளவாக போற்றப் படுவதில்லை.

பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.

இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின்உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்லேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.

ஆற்காடு நவாபின் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் ஆசையினால் பின்னர் இந்திய நாட்டு மக்கள் இருநூறு வருடங்கள் துயரப்பட நேர்ந்தது. பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன்மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

ஒவ்வொறு பாளையக்காரனும் சமாதானம் என்கிற பெயரில் கப்பம் கட்டினார்கள். இந்த நிலையில் கர்னல்ஹெரானும் மாபூஸ்கானும் தனியே பிரிந்து இரு திசைகளில் சென்று போரிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மாபூஸ்கான் முதலில் போரிடச் சென்றது, நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்காரரான பூலித்வேருடன். மாபூஸ்கான் போன சுவடு மறைவதற்குள் பூலித்வேரின் படைகாளல் விரட்டியடிக்கப்பட்டான்.

அதனால் மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்வேரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இத்தனை இருந்தும் பூலித்வேரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட உண்டு பண்ணமுடியவில்லை. பல நாட்கள் ஆகியும் பலன் ஒன்றுமில்லை.

மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார். முதல் முதலாக வெடித்த சிப்பாய் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்வேர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு அதில் வெற்றி பெற்றார். 1755- ஆம் ஆண்டு ஒலித் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல் பின்னர் பலமுறை எதிரொலித்தது. 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் எதிரொலித்தது.

பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும், 1857-ஆம் ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது. இவ்வாறு விட்டு விட்டு ஒலிகாமல் இந்த சுதந்திரக் குரல் ஒட்டுமொத்தமாக ஒரலித்திருக்குமேயானால் இந்திய நாடு அடிமைப் பட்டிருக்காது.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்வேர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள்என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.

தொடரும் . . . . . .

இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த பூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான். இத்தகையவர்கள் இருக்கும் வரை எத்தனை விதமான படைகள், மற்றும் படை கலன்கள் இருந்தாலும், அது நியாயமான போராக இருந்தாலும், வெற்றி பெற இயலாது என்பது சரித்திரச் சான்று!!.

1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.

முதலில் ஆதரவாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டவர்மனும் மற்றும் பாளையக்காரர்களும் மன்னரைக் கைவிட்டு விட்டார்கள், தளபதி வெண்ணிக் காலடி, முடேமியா என்ற பட்டாணியத் தலைவன் போன்றோர் மாவீரன் பூலித்தேவருக்காக தங்கள் உயிரையே கொடுத்தனர்.

பூலித்வேரின் படைகள் ஆங்கிலேயப் படைகளைக் காட்டிலும் எண்ணிக்கையிலும் படைக்கலனிலும் குறைந்ததாயினும் அவரால் பன்னிரெண்டாண்டுகளுக்க மேல் தாக்குப் பிடிக்க முடிந்ததென்றால், அதற்கு அவருடைய போர்முனைத் தந்திரங்கள் பற்றிய அறிவும் அவருடைய உள்ள உறுதியுமே காரணமாகும். தன்னுடைய படைகளை ஒட்டுமொத்தமாக ஈடுபடுத்தாமல் சிறிது சிறிதாகப் பிரித்துப் போரிட்டார், பின்னர் அடுத்த போருக்குள் மீண்டும் படையைப் புதுப்பித்து விடுவார். சிறிய படையோடு போரிட்டாலும் தந்திரமாகப் போரிட்டதால் அவரால் வெற்றிபெறமுடிந்தது.

அதற்கேற்றாற் போல் பூலித்தேவரின் படைவீரர்களும் தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் ஆங்கிலேய மற்றும் சுதேசிப்படை வீரர்களின் உயிரை மாய்த்விட வேண்டும் என்று நினைத்துத்தான் போரிட்டார்கள்; இத்தனை தீவிரமாக வருடக் கணக்காக போரிட்டாலும் பூலித்தேவர் தன்னுடைய பளையத்தை மறந்துவிடவில்லை. போர் என்றால் பொதுவாக வாழ்வு ஸ்தம்பித்து விடுவது வழக்கம்.

ஆனால் மன்னர், போர் நடைபெறும் காலத்டதில் செய்வதறியாது திகைத்து நின்ற உழுவர்களிடத்துச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்து, உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலை குறைவின்றி மேற்கொள்ளுமாறு செய்தார். உழவுத் தொழில்பாதிக்கப்படுவது நாட்டு மக்கள் நலனை மட்டுமல்ல, போர் நடைபெறுவதையும் பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட்டார்.

பூலித்தேவருக்கு வீரம் மட்டுமல்ல வீவேகமும் செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டது என்றுதான் கூறவேண்டும். ஆற்டகாடு நவாப்பின் அண்ணன் மாபூஸ்கான் ஆங்கிலேயரோடு ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக தன்னுயிரைக் காத்துக் கொள்வதற்கு ஓட வேண்டியதாயிற்று.

அத்தகு நிலையில் அவன், தான் எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவரிடமே சரணடைந்தான். பூலித்வேரும் இவன் எதிரியாயிற்றே என்று பொறுமையிழந்து செயல்படாது. தஞ்சம் என்று வந்தவனுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றினார். மாபூஸ்கானுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். அவன் வேற்று மதத்தவன் என்பதால் அவன் வழிபடுவதற்குத் தக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்.

மன்னரின் அன்பையும் அவரின் பண்புள்ளத்தையும் பார்த்த மாபூஸ்கான், தான் இவரைப் போய் எதிர்த்தோமே என்று வெட்கி வேதனைப்பட்டான். இவ்வாறு பல நிகழ்ச்சிகள் மன்னரைப் போர் புரியும் ஒரு மன்னனாக மட்டுமல்லாது, பலவிதத்திலும் அவரை ஒரு முழு மனிதான வெளிப்படுத்தியது.

ஆனால் அவருடைய மனிதத் தன்மையால், பிரித்தாளும் நயவஞ்சகமும், நாடு பிடிக்கும் சூழ்ச்சியும் கொண்ட ஆங்கிலேயர்களை அடக்க முடியவில்லை. ஆங்கிலேயர்களின் சூழு்ச்சி போதாதென்று கூட இருந்தே குழி பறித்தவர்களும் அதிகம்.

ஆனால் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்வேர் மறுத்துவிட்டார். போரில் வெற்றி பெற்றால் பின்னர் அதற்கு ஈடாக முதலில் சிறு நிலத்தைக் கேட்டு, பின்னர் படிப்படியாக ஆங்கிலேயன் போய் பிரெஞசுக்காரன் வந்தான் என்கின்ற நிலையை உருவாக்க பூலித்வேர் விரும்பவில்லை.

1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்வேரின் படைகள் யூசுப்பான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலந்திலிருந்து தருவிக்கப்ட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்வேரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய் படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். இதற்கிடையில் பூலித்தேவரின் கையில் போகவிருந்த யூசுப்பானின் உயிர், அவன் காட்டிய அலட்சியப் போக்கால் ஆங்கிலேயராலேயே சிறை பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையை பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரை பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர் பார்க்காத நிலையிலும் பூலித்வேர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்மயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

பூலித்தேவரின் மரணம் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிளேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்டபுற பாடல்கள் கூறுகின்றன.

மற்றோது கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்டதிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

(எனைப் பொருத்தவரை இது தான் உண்மையாக இருக்கலாம் எனத்தோன்றுகிறது காரணம் நேதாஜியையும் இப்படித்தான் செய்திருப்பார்கள்
லண்டன் வெடிகுண்டு விசயத்தில் ஒரு மாணவனை விசாரணையின்றி சுட்டுக்கொண்றிக்கிரார்கள் கொஞ்சம் கூட ஈவிரக்கமின்றி)

அவர் எப்படி மறைந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் இறுதி வரை அன்னியருடன் சமரசம் செய்யாது போராடியே மாண்டார். இந்திய விடுதலைப் போரின் முதல் வீரரான பூலித்தேவர் அன்று மன்னர்களிடையே இருந்த பிரிவின் காரணமாக இறுதிவரை தனியொருவராகப் போராடி மக்கள் மனதில் சுதந்திரத் தீயை தன்னுயிர் கொடுத்து வளர்த்தார். அது மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. விடுதலை இயக்க சரித்திரம் படைத்தான் பூலிதேவன். பூலித்வேனின் முதல் முழக்கத்தை புலவர் கூட்டம் தமிழால் புகழ் பாடட்டும். எதிர்வரும் காலம் அவனைப் போற்றிப் புகழும். தாயகம் வென்றிடவும் தண்டமிழ் வாழ்ந்திடவும் முதல் குரல் கொடுத்த வீரச்சிங்க மறவன் பூலித்தேவனன்றோ! ஆனால் அவரின் பெயர் தேசிய சரித்திரத்தில் ஏன் இடம் பெறவில்லை என்று தெரியவில்லை, பூலித்தேவரைப் பற்றிப் படிப்பதோடு நின்று விடாமல், அந்த மாவீரன் இறுதிவரை ஏங்கிக் கொண்டிருந்த, ஒற்றுமையுணர்வு இனிமேலாவது நமக்குள் வளர்வதற்கு நாம் முயற்சிச்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததாகும்..

இதை முழுமையாகப் படிப்பவர்களுக்கு சற்று மணம் கணக்கும், கணக்கனும்

முற்றும்.

New Page 2